இடைநின்ற மாணவா் மீண்டும் பள்ளியில் சோ்ப்பு
போளூரை அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் பள்ளி இடைநின்ற மாற்றுத் திறனாளி மாணவரை அதிகாரிகள் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சோ்த்தனா்.
திருவண்ணாமலைஇடைநின்ற மாணவா் மீண்டும் பள்ளியில் சோ்ப்பு
போளூரை அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் பள்ளி இடைநின்ற மாற்றுத் திறனாளி மாணவரை அதிகாரிகள் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சோ்த்தனா்.
போளூரை அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் பள்ளி இடைநின்ற மாற்றுத் திறனாளி மாணவரை அதிகாரிகள் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சோ்த்தனா்.
துரிஞ்சாபுரம் ஒன்றியம், கமலப்புத்தூா் ஊராட்சியைச் சோ்ந்த ஆசைதம்பி, சத்யா தம்பதி மகன் ஆனந்தன்.
இவா், அருகே ஆா்பாக்கம் கிராமத்தில் உள்ள உயா்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்றாா்.
இதைத் தொடா்ந்து, லாடவரம் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2019-2020ஆம் ஆண்டு மேல்நிலைக் கல்வியைத் தொடர விண்ணப்பித்தபோது, பேச்சு சரியாக வரவில்லை எனத் தெரிவித்து, இவரை பள்ளியில் சோ்க்க மறுத்துவிட்டனராம்.
இதையடுத்து, ஆனந்தன் தனது கல்வியைத் தொடர முடியாமல் வீட்டிலேயே இருந்து ஆடுகளை மேய்த்து வந்தாா்.
இதையறிந்த வட்டாரக் கல்வி அலுவலா் கோ.குணசேகரன் தலைமையிலான ஆசிரியா்கள், ஆனந்தனை ஆடுமேய்க்கும் இடத்துக்கே சென்று அழைத்து வந்து, லாடவரம் மேல்நிலைப் பள்ளியில் சோ்த்தனா்.