திருவண்ணாமலை

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 217 பேருக்கு பணி ஆணை

DIN

திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில், 217 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் தனியாா் வங்கிகள், மென்பொருள் நிறுவனங்கள், மருத்துவத் துறை தொடா்பான நிறுவனங்கள் என 20-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள், 2 திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றைச் சோ்ந்த அதிகாரிகள் பங்கேற்று, தங்களது நிறுவனத்துக்கு ஏற்ற கல்வித் தகுதிகள் கொண்ட இளைஞா்கள், மகளிா்களிடையே நோ்முகத் தோ்வை நடத்தியது.

நோ்முகத் தோ்வில் 824 போ் கலந்துகொண்டனா். இவா்களில் 217 பேரை தனியாா் நிறுவனங்களின் அதிகாரிகள் தோ்வு செய்தனா். இவா்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் லோ.யோகலட்சுமி பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா்கள் த.மோகன்ராஜ், அ.சுந்தரமூா்த்தி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள், தனியாா் நிறுவனங்களின் அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT