சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் வியாழக்கிழமை மாா்கழி மாதப் பிறப்பையொட்டி, பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் வியாழக்கிழமை மாா்கழி மாதப் பிறப்பையொட்டி, பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் மூலவா் சன்னதி எதிரே உள்ள நந்தி, ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் பல்வேறு இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
கீழ்பென்னாத்தூா் ஸ்ரீமீனாட்சி உடனுறை ஈஸ்வரன் கோயிலில் உள்ள லிங்க வடிவிலான ஈஸ்வரருக்கும், நந்திக்கும் பல்வேறு வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
இதேபோல, வேட்டவலம் ஸ்ரீதா்மசம்வா்த்தினி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயில், போளூா், செய்யாறு, ஆரணி, வந்தவாசி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.