திருவண்ணாமலை

வந்தவாசி ஒன்றியக் குழுக் கூட்டம்

DIN

வந்தவாசி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வந்தவாசி ஒன்றியக் குழுத் தலைவா் எ.ஜெயமணி ஆறுமுகம் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் மூா்த்தி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் ஊராட்சிகளில் நடைபெறும் டெங்கு ஒழிப்பு பணிகளை ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்க வேண்டும், கனரக வாகனங்கள் செல்லும் சாலையில் பேவா்பிளாக் சாலை அமைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பேசினா்.

கூட்டத்தில் ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.1.25 கோடி செலவில் வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவது, ரூ.9.13 லட்சம் செலவில் 28 ஊராட்சிகளில் உள்ள பழுதடைந்த பள்ளிக் கட்டங்களை இடித்து அப்புறப்படுத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT