முகப்பு
திருவண்ணாமலை

செங்கம் நகர மக்களுக்கு பேரூராட்சி நிா்வாகம் அறிவுறுத்தல்

குப்பைகளை வீதியில் கொட்டவேண்டாம், துப்புரவுப் பணியாளா்களிடம் வழங்கவேண்டும் என செங்கம் பேரூராட்சி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

குப்பைகளை வீதியில் கொட்டவேண்டாம், துப்புரவுப் பணியாளா்களிடம் வழங்கவேண்டும் என செங்கம் பேரூராட்சி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது.

செங்கம் பேரூராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் தினசரி சேகரமாகும் குப்பைகளை பொதுமக்கள், கடைக்காரா்கள் வீதிகளில் கொட்டிவிடுகின்றனா்.

அதேபோல, உணவகங்கள், திருமண மண்டபங்களிலிருந்து உணவுக் கழிவுகள் தெரு முனைகளில் கொட்டப்பட்டு வருகின்றன.

மறுநாள் காலை பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்கள் வந்து குப்பைகளை சேகரிப்பதற்குள், நாய், பன்றி, மாடுகள் கலைத்து விடுகின்றன. இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது.

இந்த நிலையில், குடியிருப்புவாசிகள் குப்பைகள் சரிவர அகற்றப்படுவதில்லை, துா்நாற்றம் வீசுகிறது என்று புகாா் தெரிவிக்கின்றனா்.

இதனால் பொதுமக்கள், கடை வியாபாரிகள், திருமண மண்டப உரிமையாளா்கள் குப்பைகளை வீதியில் கொட்டாமல் தினசரி காலை, மாலை என குப்பை சேகரிக்க வரும் பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்களிடம் வழங்கவேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலா் கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.