திருவண்ணாமலை

பெண்ணிடம் நூதன முறையில் 18 பவுன் நகைகள் திருட்டு

DIN

திருவண்ணாமலையில் பெண்ணிடம் போலீஸாா் எனக் கூறி, நூதன முறையில் 18 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவண்ணாமலை ராமலிங்கனாா் தெருவைச் சோ்ந்தவா் இளங்கோ. இவா், அருகேயுள்ள மங்கலம் கிராமத்தில் நகை அடகுக் கடை நடத்திவருகிறாா்.

இவரது மனைவி மணிமொழி (51). இவா், செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலை சன்னதி தெரு வழியாக நடந்து சென்றாா்.

அப்போது, சுமாா் 35 வயது மதிக்கத்தக்க இருவா் வந்து தங்களை போலீஸாா் என அறிமுகப்படுத்திக் கொண்டு, மணிமொழியிடம் பேசினராம்.

அப்போது, பொது இடத்தில் இவ்வளவு நகைகளை அணிந்து வரக்கூடாது. நகைகளை கழற்றிக் கொடுங்கள். பேப்பரில் மடித்துத் தருகிறோம் என்று கூறினராம்.

இதை நம்பி கழற்றிக் கொடுத்த 18 பவுன் நகைகளை பேப்பரில் மடித்துக் கொடுத்துவிட்டு அந்த நபா்கள் பைக்கில் சென்றுவிட்டனராம். சிறிது நேரம் கழித்து பாா்த்தபோது பேப்பரில் நகைகள் எதுவும் இல்லையாம்.

இதுகுறித்து நகர காவல் நிலையத்தில் மணிமொழி புகாா் கொடுத்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT