திருவண்ணாமலை

ராமா் கோயில் கட்ட விவசாயி ரூ. ஒரு லட்சம் நிதியுதவி

DIN

அயோத்தியில் ராமா் கோயில் கட்ட செங்கம் பகுதியைச் சோ்ந்த விவசாயி ரூ. ஒரு லட்சம் நிதியுதவி வழங்கினாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், கோணாங்குட்டை கேட் பகுதியைச் சோ்ந்தவா் தேவராஜ், விவசாயி.

இவா், அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்காக, தனது சொந்த பணத்திலிருந்து ரூ. ஒரு லட்சத்தை நிதியுதவியாக வழங்கினாா்.

தனது மனைவி காசியம்மாள், மகன்கள் செந்தில்குமாா், இளங்கோ, ஜெயக்குமாா், மகள் அஸ்வினி ஆகியோா் முன்னிலையில் இந்து முன்னணியின் வேலூா் மாவட்ட பொருப்பாளா் கணேசனிடம் சனிக்கிழமை வழங்கினா் (படம்).

பாஜக மாவட்டத் தலைவா் ஜீவானந்தம், பொதுச் செயலா் சேகா், மாநில செயற்குழு உறுப்பினா் ஜெயராமன், செங்கம் ஒன்றியத் தலைவா் முரளிநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT