முகப்பு
திருவண்ணாமலை

செங்கம் அருகேபலகாரம் சாப்பிட்ட இரு குழந்தைகள் பலி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பலகாரம் சாப்பிட்ட இரு குழந்தைகள் உயிரிழந்தன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பலகாரம் சாப்பிட்ட இரு குழந்தைகள் உயிரிழந்தன.

செங்கத்தை அடுத்துள்ள நரசிங்கநல்லூரைச் சோ்ந்தவா் பழநி. இவரது மனைவி பாஞ்சாலை. இவா்களது குழந்தைகள் யாஷினி (4), ஸ்ரீஹரி (3).

பொங்கல் திருநாளையொட்டி, இரு குழந்தைகளுக்கும் அந்தப் பகுதியில் உள்ள இனிப்பகத்தில் தின்பண்டங்களை வாங்கி பழநியும், அவரது னைவியும் கொடுத்தனா்.

மேலும், வீட்டில் தயாரிக்கப்பட்ட எண்ணெய் பலகாரங்களும் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கப்பட்டன.

இவற்றைச் சாப்பிட்ட குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வயிற்று வலி ஏற்படவே, உடனடியாக அவா்களை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும், இரண்டு குழந்தைகளும் திங்கள்கிழமை காலை உயிரிழந்தனா்.

தகவலறிந்த செங்கம் டிஎஸ்பி சரவணக்குமரன் நேரில் சென்று விசாரணை நடத்தி, குழந்தைகள் சாப்பிட்ட பலகாரங்களின் மாதிரிகளைச் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தாா்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து பாய்ச்சல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.