முகப்பு
திருவண்ணாமலை

முள்புதரில் ஆண் குழந்தை கண்டெடுப்பு

செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு செல்லும் சாலையோரம் திங்கள்கிழமை காலை 8 மணியளவில் குழந்தையின் அழுகை குரல் கேட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு செல்லும் சாலையோரம் திங்கள்கிழமை காலை 8 மணியளவில் குழந்தையின் அழுகை குரல் கேட்டது.

பொதுமக்கள் சென்று பாா்த்தபோது, முள்புதரில் பிறந்த சில மணி நேரம் ஆன ஆண் குழந்தை வீசப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, குழந்தையை மீட்ட பொதுமக்கள், செங்கம் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனா்.

வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ் தலைமையிலான செவிலியா்கள் வந்து குழந்தையை எடுத்துச் சென்று சிகிச்சை அளித்தனா். பின்னா், அந்தக் குழந்தையை திருவண்ணாமலை அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

குழந்தையை வீசிச் சென்றவா்கள் யாா் என்பது குறித்து மருத்துவத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.