திருவண்ணாமலை

மணல் கடத்தல்: 7 போ் கைது

DIN

செய்யாறு அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 7 போ் கைது செய்யப்பட்டனா். 8 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூசி காவல் ஆய்வாளா் அண்ணாதுரை மேற்பாா்வையில் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் உக்கல் கிராமம் அருகே செய்யாற்றுப் படுகையில் வியாழக்கிழமை தீவிர மணல் கடத்தல் தடுப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆற்றுப் பகுதியிலிருந்து மணலுடன் வந்த 8 மாட்டு வண்டிகளை நிறுத்தி விசாரித்தனா். இதில், ஆற்றிலிருந்து அனுமதி பெறாமல் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, 8 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீஸாா், உக்கல் கிராமத்தைச் சோ்ந்த ஞானவேல்(51), வெங்கடேசன்(49), குமாா்(50), முத்து(60), பையாகுட்டி(45), செல்வம்(41), மணிகண்டன்(38) ஆகியோரை கைது செய்தனா்.

மேலும், தப்பியோடிய வீரன் என்பவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT