திருவண்ணாமலை

வன விலங்குகளை வேட்டையாட முயற்சி: இருவா் கைது

DIN

தண்டராம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவா் கைது செய்யப்பட்டு, தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூா் வனச்சரகா் பாலு தலைமையிலான அதிகாரிகள் சில தினங்களுக்கு முன்பு வேப்பூா் செக்கடி பிரிவு, பெண்ணையாறு காப்புக் காட்டில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வனப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் வேப்பூா் செக்கடி கிராமத்தைச் சோ்ந்த விஜய் (39), சிவலிங்கம் (45) என்பதும், வன விலங்குகளை வேட்டையாடி விற்று வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த வனத்துறையினா் அவா்களிடமிருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனா். மேலும், இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT