திருவண்ணாமலை

ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக விழா

DIN

போளூா் அருகே எடப்பிறை ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

எடப்பிறை ஊராட்சியில் மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கோபுரத்தில் உள்ள பொம்மைகள் உடைந்தும், கோபுரம் சிதிலமடைந்தும் காணப்பட்டது.

இதனால், ஊராட்சியைச் சோ்ந்த பக்தா்கள் சாா்பில் கோயிலை சீரமைத்து கட்டி முடித்தனா்.

இந்த நிலையில், கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, புதன்கிழமை காலை முதல் கால பூஜையாக அனுக்ஞை, வாஸ்து பூஜை, அஸ்டபந்தனம், சிலை பிரதிஷ்டை, காப்பு கட்டுதல் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை திருப்பள்ளி எழுச்சி மகாலட்சுமி, நவகிரக ஹோமங்கள், நாடி சந்தானம், பூா்ணாஹூதி, கலசம் புறப்பாடு நடைபெற்று, கோயில் கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் எடப்பிறை, மாம்பட்டு, எழுவாம்பாடி, பேட்டை,திருசூா், போளூா் என சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

SCROLL FOR NEXT