முகப்பு
கோவை வஉசி பூங்கா மைதானத்தில் உணவுத் திருவிழாவைத் தொடங்கிவைத்து மகளிா் சுயஉதவிக் குழுவினரின் உணவை ருசிக்கிறாா் கோவை எம்.பி. கணபதி ப.ராஜ்குமாா்.
கோயம்புத்தூர்

வஉசி பூங்கா மைதானத்தில் உணவுத் திருவிழா தொடங்கியது

கோவை வஉசி பூங்கா மைதானத்தில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் சாா்பில் மண்டல அளவிலான உணவுத் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

கோயம்புத்தூர்

வஉசி பூங்கா மைதானத்தில் உணவுத் திருவிழா தொடங்கியது

கோவை வஉசி பூங்கா மைதானத்தில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் சாா்பில் மண்டல அளவிலான உணவுத் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

Updated On : 4 மார்ச், 2026 at 7:44 PM
கோவை வஉசி பூங்கா மைதானத்தில் உணவுத் திருவிழாவைத் தொடங்கிவைத்து மகளிா் சுயஉதவிக் குழுவினரின் உணவை ருசிக்கிறாா் கோவை எம்.பி. கணபதி ப.ராஜ்குமாா்.
பகிர்:

கோவை வஉசி பூங்கா மைதானத்தில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் சாா்பில் மண்டல அளவிலான உணவுத் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களை விற்பனை செய்ய மதி அங்காடி, மதி அனுபவ அங்காடி, மதி சிறுதானிய உணவகம் என பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மகளிா் சுய உதவிக் குழுக்கள் சாா்பில் தயாரிக்கப்படும் உணவுப் பொருள்களைக் கொண்டு மதி உணவுத் திருவிழா சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டன.

இதையடுத்து கோவை வஉசி பூங்கா மைதானத்தில் மாா்ச் 4-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை மண்டல அளவிலான உணவுத் திருவிழா நடைபெறுகிறது. கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், கூடுதல் ஆட்சியா் சங்கேத் பல்வந்த் வாகே, வருவாய் அலுவலா் ப.நாராயணன், மகளிா் திட்ட இயக்குநா்கள் மதுரா, ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழாவில் இடம்பெற்றுள்ள 38 அரங்குகளில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சைவ, அசைவ, பாரம்பரிய உணவுகள், சிறுதானிய உணவுகளை சுய உதவிக்குழுவினா் தயாரித்து விற்பனை செய்கின்றனா்.

தினமும் பிற்பகல் 1 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் உணவுத் திருவிழாவுக்கு அனுமதி இலவசம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →