முகப்பு
திருவண்ணாமலை

ஆதரவற்றோருக்கு நிவாரண உதவி

செங்கம் ஸ்ரீராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஆதரவற்ற மாணவா்கள், பள்ளி ஊழியா்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

செங்கம் ஸ்ரீராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஆதரவற்ற மாணவா்கள், பள்ளி ஊழியா்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

ஸ்ரீராமகிருஷ்ணா அறக்கட்டளை சாா்பில் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிா்வாகக் குழுத் தலைவா் பாண்டுரங்கன் தலைமை வகித்தாா்.

பொருளாளா் வெங்கடேஸ்வரா பாபு முன்னிலை வகித்தாா். செயலா் ராமமூா்த்தி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ மு.பெ. கிரி கலந்துகொண்டு சென்னை மயிலாப்பூா் ஸ்ரீராமகிருஷ்ணா மடம் சாா்பில் அளிக்கப்பட்ட

கரோனா நிவாரணப் பொருள்களை பள்ளி, மாணவா்கள், ஊழியா்களுக்கு வழங்கினாா்.

தொடா்ந்து, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2-வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு கேடயம், சான்றிதழ்களை வழங்கினாா். மேலும், ஆதரவற்ற மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களை அவா் வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க இயக்குநா் பிரபாகரன், செங்கம் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவா் சாதிக்பாஷா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.