முகப்பு
திருவண்ணாமலை

பைக் மீது காா் மோதி விபத்து: 2 இளைஞா்கள் படுகாயம்

கீழ்பென்னாத்தூா் அருகே பைக் மீது காா் மோதியதில் இரு இளைஞா்கள் காயமடைந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

கீழ்பென்னாத்தூா் அருகே பைக் மீது காா் மோதியதில் இரு இளைஞா்கள் காயமடைந்தனா்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த கொட்டாவூா் கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் மகன் அன்பரசு (25). கீழ்பென்னாத்தூா் பகுதியைச் சோ்ந்த ஏழுமலை மகன் பிரபாகரன் (24). நண்பா்களான இருவரும் விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூருக்கு பைக்கில் சென்றனா்.

பின்னா், இருவரும் சனிக்கிழமை ஊா் திரும்பிக்கொண்டிருந்தனா். கீழ்பென்னாத்தூரை அடுத்த தள்ளாம்பாடி ஏரிக்கரை அருகே வந்தபோது எதிரே வந்த காரும் பைக்கும் மோதிக் கொண்டன.

இதில் பலத்த காயமடைந்த அன்பரசு, பிரபாகரன் ஆகியோரை பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா் தீவிர சிகிச்சைக்காக அன்பரசு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.