திருவண்ணாமலை

40 ஊராட்சிகளுக்கு கரோனா தடுப்புப் பொருள்கள்

DIN

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 40 ஊராட்சிகளுக்கு கரோனா தடுப்புப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

போளூா் ஒன்றியத்தில் அனந்தபுரம், வாழியூா், குப்பம், கல்குப்பம், படவேடு, வெண்மணி, சந்தவாசல், கேளூா், இலுப்பகுணம், எழுவாம்பாடி, ஏந்தூவாம்பாடி, ஆத்துவாம்பாடி, துரிஞ்சிகுப்பம், மாம்பட்டு, காங்கேயனூா், திண்டிவனம் என 40 ஊராட்சிகள் உள்ளன.

இந்த ஊராட்சிகளில் கரோனா தடுப்புப் பணிக்காக ஒன்றிய பொது நிதியிலிருந்து கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடா், மஞ்சள்தூள், சோப்பு, ரசாயனப் பொருள்கள் உள்ளிட்டவற்றை

வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கரன், அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவா்களிடம் வழங்கினாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் கோவிந்தராஜீலு மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT