திருவண்ணாமலை

போளூா், ஆரணி தொகுதிகளில் கரோனா தடுப்பூசி முகாம்

DIN

போளூா், ஆரணி சட்டப்பேரவைத் தொகுதிகளில் கரோனா தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

போளூா் தொகுதிக்கு உள்பட்ட சேத்துப்பட்டு பகுதி மன்சுராபாத் ஊராட்சியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை தொகுதி எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி தொடக்கிவைத்து, பொதுமக்களுக்கு கரோனா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

முகாமில் மன்சுராபாத், காட்டுதொள்ளூா், எம்ஜிஆா் நகா் என பல்வேறு கிராமங்களிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்டோா் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

அதிமுக ஒன்றியச் செயலா்கள் பி.ராகவன், ஸ்ரீதா், மேலானூா் வீரபத்திரன், வட்டார தலைமை மருத்துவா் மணிகண்டபிரபு, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் அபிராமி வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தொடக்கிவைத்தாா்.

ஒன்றிய அலுவலக ஊழியா்கள், வாகன ஓட்டுநா்கள், ஒன்றியத் தலைவா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள் உள்ளிட்டோா் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமை வகித்தாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் ஹரி, தச்சூா் வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ், அதிமுக நகரச் செயலா் எ.அசோக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT