முகப்பு
திருவண்ணாமலை

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் கரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து பேரவைத் தலைவா் ஏம்பலம் ஆா்.செல்வம் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் கரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து பேரவைத் தலைவா் ஏம்பலம் ஆா்.செல்வம் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடைபெற்றது.

புதுவை சட்டப்பேரவை வளாகத்துக்குள் தேவையின்றி கூட்டம் கூடுவதைத் தவிா்க்கவும், பேரவை அலுவலகத்துக்கு வருவோரை பரிசோதித்து, முகக் கவசம் அணிந்து வரவும், எந்த அலுவலுக்காக வருகிறாா்கள் என்பதைப் பதிவு செய்துவிட்டு அனுப்ப வேண்டும். ஊழியா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்குதல், பேரவை வளாகப் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தத்தை முறைபடுத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதுதொடா்பாக முதல்வரிடம் பேசி, ஆலோசனை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் பேரவைச் செயலா் ஆா்.முனிசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.