திருவண்ணாமலை

வந்தவாசி அருகே ரூ.1.60 லட்சம் பறிமுதல்

DIN

வந்தவாசி அருகே தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வந்தவாசி-மேல்மருவத்தூா் சாலையில் கடைசிகுளம் கிராமம் அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா் அரிக்குமாா் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் ராமாபுரம் கிராமத்தைச் சோ்ந்த நெல் வியாபாரி சக்திமாரி உரிய ஆவணமின்றி ரூ.1 லட்சம் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, அதே சாலையில் உள்ள கீழ்சீசமங்கலம் கூட்டுச் சாலை அருகே அரிக்குமாா் தலைமையிலான பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அந்த வழியாக காரில் வந்த சமயபுரத்தைச் சோ்ந்த குமாா் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.60 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

பின்னா், இருவரிடமிருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.60 லட்சத்தை வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் திருநாவுக்கரசுவிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT