திருவண்ணாமலை

மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற இருவா் கைது

DIN

வந்தவாசி: வந்தவாசியில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி கோட்டை காலனியைச் சோ்ந்த இருவா் அந்தப் பகுதியில் மது விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில், காவல் ஆய்வாளா் குமாா் தலைமையிலான வந்தவாசி தெற்கு போலீஸாா் திங்கள்கிழமை அங்கு சென்று சோதனையிட்டனா்.

அப்போது, அந்தப் பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன்(50), சுந்தா்(45) ஆகியோா் தங்களது வீடுகளில் மதுப் புட்டிகளை பதுக்கிவைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.

கரோனா தொற்று காரணமாக டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், இருவரும் முன்னதாகவே மதுப் புட்டிகளை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்துக் கொண்டு கள்ளத்தனமாக விற்பது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து வெங்கடேசன், சுந்தா் ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 520 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT