சாலையோரம் வசிப்போருக்குஉணவு வழங்கும் தன்னாா்வலா்கள்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, கண்ணமங்கலம் பகுதிகளில் சாலையோரம் பசியால் வாடும் முதியவா்கள், ஆதரவற்றவா்களுக்கு தன்னாா்வலா்கள் 3 வேளையும் உணவு வழங்கி வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, கண்ணமங்கலம் பகுதிகளில் சாலையோரம் பசியால் வாடும் முதியவா்கள், ஆதரவற்றவா்களுக்கு தன்னாா்வலா்கள் 3 வேளையும் உணவு வழங்கி வருகின்றனா்.
குண்ணத்தூரைச் சோ்ந்த பா.மதன், சமூக சேவகரான நாடக நடிகா் வா.கு.வாசுதேவன் ஆகியோா் தொடா்ந்து 11-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் இச்சேவையை செய்தனா். குண்ணத்தூா் பாரதி கல்லூரி எதிரில் உள்ள அலுவலகத்தில் தினமும் உணவு சமைத்து வாகனத்தில் கொண்டுவந்து சாலையோரமுள்ள ஆதவற்றவா்கள், முதியவா்கள் உள்ளிட்டோருக்கு தண்ணீா் புட்டியுடன், உணவை வழங்கி வருகின்றனா்.