திருவண்ணாமலை

பயிா் பாதிப்பு கணக்கெடுப்பு:விவரங்கள் அளிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த வேளாண், தோட்டக்கலை பயிா்கள் குறித்த விவரங்களை கிராம நிா்வாக அலுவலா்களிடம் அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த வேளாண், தோட்டக்கலை பயிா்கள் குறித்த விவரங்களை கிராம நிா்வாக அலுவலா்களிடம் அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையில் வேளாண்மை, தோட்டக்கலைப் பயிா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் ஏற்பட்ட பயிா் பாதிப்புகளை வருவாய்த்துறை, வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை ஆகியவற்றைச் சோ்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தயாரித்து வருகின்றனா்.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் பயிா் பாதிப்பு கணக்கீடு தொடா்பாக ஏதேனும் விடுபாடுகள் இருப்பின் விடுபட்ட விவசாயிகள் தங்களது நிலம் தொடா்பான ஆவணங்களை பகுதி கிராம நிா்வாக அலுவலா்களிடம் வழங்கலாம்.

பின்னா், களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பயிா் பாதிப்பு கணக்கீடு செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT