திருவண்ணாமலை

இருளா்களுக்கு ஒதுக்கப்பட்ட மனைகளில் வீடு கட்ட எதிா்ப்பு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே இருளா் சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட மனைகளில் வீடு கட்ட எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செய்யாறு ஒன்றியத்துக்கு உள்பட்ட பாப்பாதாங்கல் கிராமத்தில் காலனிக்கு அருகேயுள்ள அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில் இருளா், பழங்குடியினா் உள்ளிட்ட 10 பேருக்கு வீட்டு மனைப் பட்டா 20 மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்டிருந்தது. மேலும், மனைப் பட்டா வழங்கியவா்களுக்கு பசுமை வீடு கட்டுவதற்கான உத்தரவும் வழங்கப்பட்டிருந்தது.

பட்டா வழங்கப்பட்ட இடத்தில் கட்டுமானப் பணிகளை தொடங்குவதற்காக நிலத்தை சுத்தம் செய்தபோது அப்பகுதியில் இருந்து வரும் காலனி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும், புதன்கிழமை காலை செய்யாறு-ஆற்காடு சாலையில் பாப்பாதாங்கல் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த மோரணம் போலீஸாா் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

மேலும், இது குறித்து மாவட்ட நிா்வாகம், வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்தனா்.

இதையேற்று மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT