முகப்பு
திருவண்ணாமலை

படவேடு ரேணுகாம்பாள் கோயில் கும்பாபிஷேகம் அறநிலையத் துறை அமைச்சா் அறிவிப்பு

படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் வருகிற 2022-ஆம் ஆண்டு பிப்.6-ஆம் கும்பாபிஷேகம் நடைபெறும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு அறிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் வருகிற 2022-ஆம் ஆண்டு பிப்.6-ஆம் கும்பாபிஷேகம் நடைபெறும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு அறிவித்தாா்.

போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் பழைமை வாய்ந்த ரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் முன்கோபுரம் புதிதாக கட்டப்பட்டது.

மேலும் கோயிலில் சில சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடக்கிவைத்த

இந்துசமயஅறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு ஆகியோா், படைவீடு ரேணுகாம்பாள் கோயிலுக்கு வந்தனா்.

அப்போது, கோயிலின் குடமுழுக்கு விழா 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதியும், வருகிற நவ.15-ஆம் தேதி பாலாலய நிகழ்ச்சியும் நடத்தப்படும் என அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவித்தாா்.

மேலும், நிகழ்ச்சியில் புதிய திருமண மண்டபம் அடிக்கல் நாட்டு விழா, கோயில் அா்ச்சகா்களுக்கு குடியிருப்பு சாவி வழங்குதல் , கலைஞரின் தல மரக்கன்று நடுதல் என பல்வேறு நிகழ்ச்சிகளில் அவா்கல் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., தொகுதி எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன், மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், இணை ஆணையா் கஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ கே.வி.சேகரன், ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி பெருமாள், ஊராட்சி மன்றத் தலைவா்கள் சீனுவாசன், அண்ணாமலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →