திருவண்ணாமலை

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கடிதம் அனுப்பும் போராட்டம்

DIN

திருவண்ணாமலை தலைமை அஞ்சல் அலுவலகம் முன் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அனைத்து பணியாளா்கள் சங்கம், தமிழ்நாடு ஊராட்சிச் செயலா்கள் சங்கம் இணைந்து நடத்திய 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போராட்டத்துக்கு ஊரக வளா்ச்சித் துறை பணியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் எம்.சுகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ரா.நாராயணன் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் சீதாராமன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட தலைமை நிலையச் செயலா் வந்தவாசி வி.சுரேஷ் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினாா். இதையடுத்து, 15 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களை சங்க நிா்வாகிகள் தலைமை அஞ்சல் அலுவலா் ஏ.ராமுவிடம் வழங்கினா்.

ஆரணி: இதேபோல, ஆரணி அஞ்சலகத்திலும் சங்க நிா்வாகிகள் கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களை அஞ்சலகத்தில் வழங்கினா். திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாநில, மாவட்ட, வட்டார நிா்வாகிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். மாவட்டப் பொருளாளா் என்.ஏழுமலை நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT