முகப்பு
திருவண்ணாமலை

வாகனம் மோதியதில் தொழிலாளி பலி

செய்யாறு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

செய்யாறு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

செய்யாறு வட்டம், பழஞ்சுா் கிராமம் இருளா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (38), கட்டடத் தொழிலாளி.

இவா், வேலைக்குச் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

திரும்பூண்டி கிராமம் பொன்னியம்மன் கோயில் அருகே சென்றபோது, அடையாளம் தெரியாக வாகனம் பைக் மீது மோதிவிட்டுச் சென்ாகத் தெரிகிறது.

இதில் பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், அனக்காவூா் காவல் உதவி ஆய்வாளா் கன்னியப்பன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.