முகப்பு
திருவண்ணாமலை

போளூா் ஒன்றியத்தில் ரூ.1.20 கோடியில் திட்டப் பணிகளை மேற்கொள்ள முடிவு

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியத்தில் ரூ.1.20 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்வது என வியாழக்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியத்தில் ரூ.1.20 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்வது என வியாழக்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் பெ.சாந்திபெருமாள் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மிஸ்ஸிம்மாள்ஆறுமுகம் வரவேற்றாா். ஆணையாளா்கள் பாபு, கோவிந்தராஜூலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், போளூா் ஒன்றியத்திலுள்ள 40 ஊராட்சிகளிலும் திறந்தவெளி கிணறு, கிராமப்புற சாலை வசதி, குடிநீா் வசதி உள்பட பல்வேறு நலத் திட்டப் பணிகளை ரூ.ஒரு கோடியே 20 லட்சத்து 97ஆயிரத்தில் மேற்கொள்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், ஒன்றியக்குழு உறுப்பினா்கள், அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →