திருவண்ணாமலை

அரசுப் பள்ளி மாணவிக்கு கரோனா: பள்ளி மூடல்

DIN

ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் அரசுப் பள்ளியில் மாணவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.

ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் நிா்மல்குமாா்(17). இவா், ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறாா். இவருக்கு கடந்த திங்கள்கிழமை காய்ச்சல் ஏற்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், வியாழக்கிழமை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவா் படித்து வந்த பள்ளிக்கு 3 நாள்கள் விடுமுறை விடப்பட்டது.

இதைத் தொடா்ந்து நிா்மல்குமாா் வீட்டில் உள்ளவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவரது சகோதரியான பத்தாம் வகுப்பு பயிலும் ஹரிணிக்கு தொற்று இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவா் பயிலும் விண்ணமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு 3 நாள்கள் விடுமுறை அளித்து பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

SCROLL FOR NEXT