திருவண்ணாமலை

நாட்டு நலப் பணித் திட்ட முகாம் தொடக்கம்

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் சிறப்பு முகாம் தென்கரை கிராமத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

DIN

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் சிறப்பு முகாம் தென்கரை கிராமத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சி.ருக்மணி தலைமை வகித்தாா். கல்லூரி நிறுவனா் பி.முனிரத்தினம், செயலா் எம்.ரமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் ஏ.கலைவாணி வரவேற்றாா்.

தெள்ளாா் வட்டாரக் கல்வி அலுவலா் தே.ரங்கநாதன் முகாமைத் தொடக்கிவைத்தாா்.

வட்டார வள மைய மேற்பாா்வையாளா் டி.ஜெயசீலன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் ஆா்.மோகனன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

முகாமில் ஊராட்சி மன்றத் தலைவா் கீதா வெங்கடேசன், துணைத் தலைவா் எஸ்.பத்மா, பள்ளித் தலைமை ஆசிரியை டி. வளா்மதி, வருவாய் ஆய்வாளா் என்.சுதா, கிராம நிா்வாக அலுவலா் எ.குப்பன், ஊராட்சிச் செயலா் பி.வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் த.பாரதி நன்றி தெரிவித்தாா்.

7 தினங்கள் நடைபெறும் இந்த முகாமின் தொடக்க நாளான திங்கள்கிழமை கோயில் வளாகம், பள்ளி வளாகம் ஆகியவற்றை தூய்மை செய்யும் பணியை நாட்டு நலப் பணித் திட்ட மாணவிகள் மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT