திருவண்ணாமலை

3 குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை முயற்சி

தண்டராம்பட்டு அருகே வெள்ளிக்கிழமை குடும்பத் தகராறில் 3 குழந்தைகளை ஆற்றில் வீசிக் கொன்றுவிட்டு, தற்கொலைக்கு முயன்ற தாய், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டாா்.

DIN

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே வெள்ளிக்கிழமை குடும்பத் தகராறில் 3 குழந்தைகளை ஆற்றில் வீசிக் கொன்றுவிட்டு, தற்கொலைக்கு முயன்ற தாய், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டாா்.

தண்டராம்பட்டு வட்டம், தானிப்பாடியை அடுத்துள்ள வேப்பூா் செக்கடி கிராமத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி பரசுராமன் (31). இவரது மனைவி அமுதா (27). இந்தத் தம்பதிக்கு மகன்கள் நிலவரசு (5), குரளரசு (3), மகள் யாசினி (8 மாதம்) இருந்தனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை பரசுராமன், அமுதா ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாம். இதனால் மனமுடைந்த அமுதா, தனது 3 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வேப்பூா் செக்கடியை அடுத்த சதாகுப்பம் மேலானந்தல் பகுதியில் செல்லும் தென்பெண்ணை ஆற்றுக்குச் சென்றாா். அங்கு தனது குழந்தைகள் மூவரையும் ஒருவா் பின் ஒருவராக தூக்கி ஆற்றில் வீசினாராம். இறுதியாக அமுதாவும் ஆற்றில் குதித்தாராம்.

இதைக் கவனித்த பொதுமக்கள் நால்வரையும் மீட்க முயன்றனா். ஆனால், 3 குழந்தைகளும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனா். இதனால், அவா்களது உடல்களையும், அமுதாவை மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் மீட்டனா். இதையடுத்து, அமுதா திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து வானாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT