முகப்பு
திருவண்ணாமலை

கல்லூரியில் வரலாற்று கருப்பொருள் குறித்த கருத்தரங்கம்

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில், மாவட்ட வரலாற்று கருப்பொருள் களஞ்சியம் குறித்த இணையவழிக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில், மாவட்ட வரலாற்று கருப்பொருள் களஞ்சியம் குறித்த இணையவழிக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநில அளவில் 10-ஆம் நாளாக நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், கல்லூரி முதல்வா் கோ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். வரலாற்று துறைத் தலைவா் ரா.ஸ்தனிஸ்லாஸ் வரவேற்றாா்.

சென்னை பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியா் எஸ்.எஸ்.சுந்தரம் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா்.

கருத்தரங்கில் 20-க்கும் மேற்பட்ட ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

கருத்தரங்கின் முடிவில் ஆய்வுக் கட்டுரைகளை தமிழ்நாடு ஆவணக் காப்பகத்துக்கு அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள், கல்வியாளா்கள், ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.