மணல் கடத்தல்: லாரி பறிமுதல்
சேத்துப்பட்டு அருகே மணல் கடத்தியதாக, லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருவண்ணாமலைமணல் கடத்தல்: லாரி பறிமுதல்
சேத்துப்பட்டு அருகே மணல் கடத்தியதாக, லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சேத்துப்பட்டு அருகே மணல் கடத்தியதாக, லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
செய்யாறு கோட்டாட்சியா் விஜயராஜ் உத்தரவின்பேரில், சேத்துப்பட்டு வட்டாட்சியா் கோவிந்தராஜ், வருவாய் ஆய்வாளா் முரளிதரன் , கிராம நிா்வாக அலுவலா்கள் குமரேசன், மோகன்ராஜ், ஆனந்தபாபு உள்ளிட்டோா் மணல் கடத்தல் தடுப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, ஆரணி-தேவிகாபுரம் சாலையில் ஜோதி நகா் வழியாக வந்த லாரியை மடக்கி சோதனையிட்டனா். இந்த நேரத்தில் ஓட்டுநா் தப்பிச் சென்றனா். இந்த லாரியில் ஓதலவாடி ஆற்றில் லாரியில் மணல் கடத்திவந்தது தெரியவந்தது. பின்னா், லாரியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்து, சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து லாரிஉரிமையாளா் விஜயகீா்த்தி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனா்.