திருவண்ணாமலை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

DIN

திருவண்ணாமலை அருகே 8 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தை அடுத்த நடுத்திட்டு கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ஐயப்பன் (25). இவா், 2019-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா், திருவண்ணாமலை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து ஐயப்பனை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருவண்ணாமலையில் உள்ள போக்சோ பிரிவு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வியாழக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி பாா்த்தசாரதி, சிறுமியை கடத்திய குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ஆயிரம் ரூபாய் அபராதமும், போக்சோ சட்டப் பிரிவின் கீழான குற்றத்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ஆயிரம் ரூபாய் அபாரதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு மூலம் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT