முகப்பு
திருவண்ணாமலை

செங்கம் ஒன்றியத்தில் திட்டப் பணிகள் மாவட்ட அதிகாரி ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்தில் ரூ.ஒரு கோடியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநா் லட்சுமிநரசிம்மன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்தில் ரூ.ஒரு கோடியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநா் லட்சுமிநரசிம்மன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

செங்கம் ஒன்றியத்திற்கு உள்பட்ட வளையாம்பட்டு கிராம ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 33.11 லட்சத்தில் சிறு பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

புதியகுயிலம், சென்னசமுத்திரம் கிராம ஊராட்சி நிா்வாகம் மூலம் ரூ.36 லட்சத்தில் சாலைப் பணிகள் நடைபெறுகின்றன. சென்னசமுத்திரம் கிராமத்தில் ரூ.15.70 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

மேலும், ஊரக வேலைத் திட்டத்தின் கீழ்

கால்வாய்கள் சீரமைத்தல், சிறு பாலங்கள் கட்டுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநா் லட்சுமிநரசிம்மன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செங்கம், புதுப்பாளையம் ஒன்றிய பணி மேற்பாா்வையாளா்கள் மற்றும் ஊராட்சி செயலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தி பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினாா்.

உதவி செயற்பொறியாளா் சங்கா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரபியுல்லா, பரிமேலழகன், முருகன் உள்ளிட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள், கிராம ஊராட்சிச் செயலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.