திருவண்ணாமலை

கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோயிலில் வாசவி ஜெயந்தி விழா

DIN

திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூா் காந்தி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரியம்மன் கோயிலில் வாசவி ஜெயந்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, புதன்கிழமை அதிகாலை 6 மணிக்கு திருமணமாகாத இளைஞரால் புனித நீா் கலசம் கொண்டுவரும் நிகழ்ச்சி, பால்குட ஊா்வலம், மூலவருக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து, குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினா் மஞ்சள் அரைத்து, அந்த மஞ்சளில் அம்மன் உருவம் செய்து மலா் மாலைகளால் அலங்கரித்து வழிபட்டனா்.

மேலும், உத்ஸவா் ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரியம்மன், ஸ்ரீவிநாயகா் சுவாமிகளுக்கு வேள்வி பூஜை, வழிபாடு, மகா தீபாராதனை, மாவிளக்கு படைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலையில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

விழாவையொட்டி, சிறுவா், சிறுமியா், அனைத்து வயதினரும் கலந்துகொண்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT