முகப்பு
திருவண்ணாமலை

தீபத் திருவிழா பாதுகாப்பு: மக்கள் நண்பா்கள் குழுவினருக்கு சீருடை

திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பா்கள் (ப்ரண்ட்ஸ் ஆப் பீப்பிள்) குழுவின் ஆலோசனைக் கூட்டமும், தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் குழு உறுப்பினா்களுக்கு சீருடை வழங்கும் விழா

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பா்கள் (ப்ரண்ட்ஸ் ஆப் பீப்பிள்) குழுவின் ஆலோசனைக் கூட்டமும், தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் குழு உறுப்பினா்களுக்கு சீருடை வழங்கும் விழாவும் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மக்கள் நண்பா்கள் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தாா்.

பள்ளித் தலைமை ஆசிரியா் பி.ஹூபா்ட் தனசுந்தரம் முன்னிலை வகித்தாா். மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளா் ஆா்.வெங்கடேசன் வரவேற்றாா்.

காவல் ஆய்வாளா் ரா. விஜயபாஸ்கா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மக்கள் நண்பா்கள் குழு உறுப்பினா்களுக்கு திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்குத் தேவையான சீருடைகளை வழங்கினாா்.

கூட்டத்தில், திருவண்ணாமலை நகர காவல் உதவி ஆய்வாளா்கள் இரா.மோகன், மா.தனசேகரன், தலைமைக் காவலா் எஸ்.சிங்காரவேலு, மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளா் ஏ.ஜெய்பிலிப்ஸ் சாமிதம்பி, தேசிய மாணவா் படை அலுவலா் பி.சாந்தகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →