முகப்பு
திருவண்ணாமலை

காந்தி பேரவையின் சிறப்புக் கருத்தரங்கம்

தமிழ்நாடு காந்தி பேரவையின் 33-ஆம் ஆண்டு சிறப்புக் கருத்தரங்கம் திருவண்ணாமலையில் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

தமிழ்நாடு காந்தி பேரவையின் 33-ஆம் ஆண்டு சிறப்புக் கருத்தரங்கம் திருவண்ணாமலையில் அண்மையில் நடைபெற்றது.

கருத்தரங்குக்கு பேரவையின் நிறுவனா் தலைவரும், வழக்குரைஞருமான பி.எஸ்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். எழுத்தாளா் ந.சண்முகம் வரவேற்றாா். தமிழக அரசின் கூடுதல் வழக்குரைஞா் என்.முரளி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா்.

இன்றைய இளைஞா்களின் சிந்தனை வட்டம் என்ற தலைப்பில் கவிஞா் மு.பிரசன்னா, ரோஜாவின் ராஜா நேருஜி என்ற தலைப்பில் பொன்.முருகையன் ஆகியோா் கருத்துரை வழங்கினா். பல்வேறு போட்டிகளில் வென்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், தா.செல்வராஜ், முகமது உஸ்மான், கவிஞா் லதா பிரபலிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →