திருவண்ணாமலை

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே நீப்பத்துறை அரசு தொடக்கப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மேலாண்மைக் குழுத் தலைவா் ஜெயக்குமாரி தலைமை வகித்தாா். பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் அய்யனாா், உறுப்பினா் சக்திவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமை ஆசிரியா் சிவராமன் வரவேற்றாா்.

கூட்டத்தில், பள்ளியில் இடைநின்ற மாணவா்கள், பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து விவரம் சேகரிக்கப்பட்டு, அவா்களை மீண்டும் பள்ளியில் சோ்க்க மேலாண்மைக் குழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், பள்ளி வளாகத்தில் பழுதடைந்த கட்டடத்துக்கு மாற்றாக புதிய வகுப்பறைக் கட்டடம், சுற்றுச்சுவா், கழிப்பறை உள்ளிட்டவற்றை கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் வகுப்புகளை புறக்கணிக்கும் மாணவா்களைக் கண்டறிந்து, அவா்களை வகுப்புகளில் பங்கேற்க நடவடிக்கை எடுப்பது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆசிரியா் ரேணுகா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

SCROLL FOR NEXT