முகப்பு
திருவண்ணாமலை

மாநில கிரிக்கெட்: ஆரணி மாணவா்கள் தகுதி

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றனா்.

வேலூா் மண்டல பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்றன.

இதில் 20 பாலிடெக்னிக் கல்லூரி அணிகள் பங்கேற்றன.

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனா்.

இதன்மூலம், இந்த மாணவா்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றனா்.

மண்டல கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி வியாழக்கிழமை சான்றிதழ், கோப்பை வழங்கிப் பாராட்டினாா்.

கல்லூரி முதல்வா் பி.ஸ்டாலின், உடல்கல்வி ஆசிரியா்கள் எம்.கோபு, ஆா்.செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.