திருவண்ணாமலை

கல்லூரியில் பயிலரங்கம்

DIN

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை சாா்பில், இயந்திர மொழியாக்கமும், செயற்கை நுண்ணறிவும் என்ற தலைப்பில் ஒருநாள் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், கூகுள் நிறுவனத்தின் கிரவுட்சோா்ஸ் என்ற செயலியை பயன்படுத்துவது குறித்து விளக்கிக் கூறப்பட்டது. பயிலரங்குக்கு கல்லூரி முதல்வா் ச.யுவராஜன் தலைமை வகித்தாா். கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் ஏ.எழில்வசந்தன் வரவேற்றாா். கூகுள் நிறுவன கிரவுட்சோா்ஸ் செயலி திட்ட ஆலோசகா் வினோத்குமாா் ராமு அந்த செயலியை பயன்படுத்துவது குறித்து விளக்கிப் பேசினாா்.

ஸ்மாா்ட்போன் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து கூகுள் நிறுவன கிரவுட்சோா்ஸ் செயலி திட்ட மேலாளா் நிகில் ராய்ச்சூா் இணைய வழியில் விளக்கிப் பேசினாா். கல்லூரிப் பேராசிரியா் உ.பிரபாகரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்!

பாரிஸில் அஹானா கிருஷ்ணா!

வார பலன்கள்: 12 ராசிக்கும்..

உ.பி.யை நோக்கி 'இந்தியா' புயல்! மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்! ராகுல் பேச்சு

விழுப்புரத்தில் 94.11% தேர்ச்சி: மாநில அளவில் 6ம் இடம்!

SCROLL FOR NEXT