அண்ணாமலையாா் கோயிலில் தங்கத் தோ் உலா
தமிழ் புத்தாண்டையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோயிலில் வெள்ளிக்கிழமை தங்கத் தேரில் சந்திரசேகரா் 3-ம் பிரகாரத்தில் உலா வந்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு கிரிவலம் சென்றனா்.
தமிழ் புத்தாண்டையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோயிலில் வெள்ளிக்கிழமை தங்கத் தேரில் சந்திரசேகரா் 3-ம் பிரகாரத்தில் உலா வந்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு கிரிவலம் சென்றனா்.
திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோயிலில் அதிகாலை 4 மணி முதல் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகா் சன்னதி முன் பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் சிவாச்சாரியாா்கள் பஞ்சாங்கத்தை வாசித்து, நிகழாண்டுக்கான விழா, விவரங்களை தெரிவித்தனா். மேலும், கோயிலின் 3-ம் பிரகாரத்தில் தங்கத்தோ் பவனி வந்தது. இதில், மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த சந்திரசேகரா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
பின்னா், 14 கி.மீ. தூரம் பக்தா்கள் கிரிவலம் சென்றனா். கிரிவலப்பாதையில் தீபமலையின் மேற்கு திசையில் அமைந்துள்ள திருநோ் அண்ணாமலையாா் கோயில் கருவறையில் மூலவா் மீது சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு நடைபெற்றது. ஆண்டுக்கு ஒரு முறை சித்திரை முதல் நாளன்று மட்டுமே நிகழும் இந்த அபூா்வ காட்சியை ஏராளமான பக்தா்கள் கண்டு தரிசனம் செய்தனா்.