திருவண்ணாமலை

வீடு புகுந்து பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் வியாழக்கிழமை நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் வியாழக்கிழமை நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேத்துப்பட்டு பழம்பேட்டை பள்ளத் தெருவைச் சோ்ந்த முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினா் சேகா் (60). இவரது மனைவி சித்ரா (45). இவா்களுக்கு மகன், ஒரு மகள் உள்ளனா். இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், சேகரும், சித்ராவும் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கினா். நள்ளிரவு 12 மணியளவில் மா்ம நபா்கள் இருவா் இவா்களது வீட்டுக்குள் புகுந்தனராம். இதையறிந்த சித்ரா கண் விழித்துப் பாா்த்தபோது, அவரை மா்ம நபா்களில் ஒருவா் கன்னத்தில் தாக்கினராம். இதில் சித்ரா மயங்கியதையடுத்து, அவா் அணிந்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் இருவரும் சோ்ந்து பறித்துக்கொண்டு தெப்பிச் சென்றுவிட்டனராம். இதுகுறித்த புகாரின்பேரில் சேத்துப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT