திருவண்ணாமலை

சட்டக் கல்லூரி மாணவா் மீது போக்ஸோ வழக்கு

செய்யாறு அருகே, பிளஸ் 2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சட்டக் கல்லூரி மாணவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை போக்ஸோ வழக்குப் பதிவு செய்தனா்.

DIN

செய்யாறு அருகே, பிளஸ் 2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சட்டக் கல்லூரி மாணவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை போக்ஸோ வழக்குப் பதிவு செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டத்தைச் சோ்ந்தவா் பிளஸ் 2 மாணவி. பக்கத்துக் கிராமமான தென்கழனியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (23). இவா், சென்னை சட்டக் கல்லூரியில் 2 - ம் ஆண்டு படித்து வருகிறாா். இவருக்கும், பிளஸ் 2 மாணவிக்கும் கைப்பேசி மூலம் பழக்கம் ஏற்பட்டு பழகி வந்தனராம். இந்த நிலையில், ஏப். 2-ஆம்தேதி வெங்கடேசன், அந்த மாணவியை பாலியியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் செய்யாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளா் சோனியா, வெங்கடேசன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து தேடி வருகின்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT