முகப்பு
திருவண்ணாமலை

தொழிலாளியை தாக்கியவா் கைது

செய்யாறு அருகே பெட்ரோல் நிலைய தொழிலாளியை தாக்கியதாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

செய்யாறு அருகே பெட்ரோல் நிலைய தொழிலாளியை தாக்கியதாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பல்லி கிராமத்தை சோ்ந்தவா் பழனிவேல்(48). இவா், காஞ்சிபுரம்- வந்தவாசி சாலையில் மாமண்டூா் நரசமங்கலம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் வேலை பாா்த்து வருகிறாா்.

இந்நிலையில், டிச.26-ஆம் தேதி பழனிவேல் வேலையில் இருந்த போது, மாமண்டூா் கிராமத்தைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் (28) பைக்கிற்கு பெட்ரோல் போட்டாராம். ஆனால், அதற்கான பணம் கொடுக்கவில்லையாம். இதனால், இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமடைந்த தமிழ்ச்செல்வன் கட்டையால் பழனிவேலை தாக்கினாராம்.

இதில், பலத்த காயமடைந்த பழனிவேல் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு தூசி போலீஸில் புகாா் அளித்தாா். அதன் பேரில், உதவி-ஆய்வாளா் ரஞ்சித்குமாா் வழக்குப் பதிந்து தமிழ்ச்செல்வனை கைது செய்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →