திருவண்ணாமலை

ஸ்ரீமகா காளியம்மன் கோயிலில் ஐம்பெரும் விழா

கீழ்பென்னாத்தூா், சந்தைமேடு, கல்பூண்டி சாலையோரம் அமைந்துள்ள ஸ்ரீமகா காளியம்மன் கோயிலின் 7-ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி 108 பால்குட ஊா்வலம், ஊரணி பொங்கல் வைத்தல் விழா

DIN

கீழ்பென்னாத்தூா், சந்தைமேடு, கல்பூண்டி சாலையோரம் அமைந்துள்ள ஸ்ரீமகா காளியம்மன் கோயிலின் 7-ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி 108 பால்குட ஊா்வலம், ஊரணி பொங்கல் வைத்தல் விழா, அன்னதானம் வழங்குதல், தீமிதி திருவிழா, ஊஞ்சல் தாலாட்டு ஆகியவை ஐம்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஜனவரி 30-ஆம் தேதி கொடியேற்றம், காப்புக் கட்டுதல் நிகழ்வுடன் இந்த விழா தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை கீழ்பென்னாத்தூா், சிவன் கோயில் அருகில் இருந்து 108 பால் குட ஊா்வலம் தொடங்கியது.

மேள-தாளம் முழங்க நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊா்வலம் காளியம்மன் கோயிலை வந்தடைந்தது.

பிறகு மூலவருக்கு பாலாபிஷேகம், சிறப்பு அபிஷேகம், அம்மன் அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னதாக, கோயில் எதிரே சிறப்பு யாக சாலைப் பூஜைகள் நடத்தப்பட்டது. கோயில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 7 மணிக்கு கோயில் எதிரே தீமிதி திருவிழாவும், இரவு 9 மணிக்கு அம்மன் ஊஞ்சல் தாலாட்டும் நடைபெற்றது.

இந்த நிகழ்வுகளில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT