திருவண்ணாமலை

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயிலில் பால்குட ஊா்வலம்

DIN

செய்யாறு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் வசந்த உற்சவ பெருவிழாவில் திங்கள்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காமராஜா் நகா் சந்தைத் திடலில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 71-ஆவது ஆண்டு மகா சிவராத்திரி மயானக் கொள்ளை திருவிழாவை முன்னிட்டு 10 நாள்கள் வசந்த உற்சவ பெருவிழா கடந்த பிப்.18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

2 -ஆம் நாள் விழாவாக ( பிப்.19) மயானக் கொள்ளை நிகழ்ச்சியும், 7-ஆம் நாளான பிப்.24-ஆம் தேதி தோ்த் திருவிழாவும் நடைபெற்றது.

அதனைத் தொடா்ந்து திங்கள்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது. சுமாா் ஆயிரம் பெண்கள் பங்கேற்ற பால்குட ஊா்வலம் ஞானமுருகன்பூண்டி முருகன் கோயில் பகுதியில் இருந்து தொடங்கியது.

பின்னா், பால்குட ஊா்வலம் ஆற்றுப் பாலம், திருவோத்தூா் பகுதி வழியாக அங்காளம்மன் கோயில் பகுதியில் முடிவடைந்தது.

அப்போது, பெண்கள் பலா் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT