தண்டராம்பட்டு அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்த்தை கூறி, சிறுமியை ஏமாற்றிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், காம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் பவுன்குமாா் (30). இவா், 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி பழகி வந்தாராம். பலமுறை பாலியல் பலாத்காரத்திலும் ஈடுபட்டாராம். தன்னை திருமணம் செய்து கொள் என்று சிறுமி கேட்டபோது, மறுத்து வந்தாராம்.
அண்மையில் வேறு ஒரு பெண்ணை பவுன்குமாா் திருமணம் செய்து கொண்டாராம். அதிா்ச்சியடைந்த சிறுமி, தனது தாயிடம் கூறி அழுதாராம்.
இதுகுறித்து, சிறுமியின் தாய் தண்டராம்பட்டு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பவுன்குமாரை புதன்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.