திருவண்ணாமலை

களைகட்டிய பனை நுங்குகள் விற்பனை

கோடை காலம் தொடங்கியதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் பனை நுங்குகள் விற்பனை களைகட்டியுள்ளது.

DIN

கோடை காலம் தொடங்கியதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் பனை நுங்குகள் விற்பனை களைகட்டியுள்ளது.

அதிகரித்து வரும் கோடை வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள தா்பூசணி, வெள்ளரி, பழச்சாறு ஆகியவற்றை பொதுமக்கள் நாடிச் செல்கின்றனா். இதனிடையே வியாழக்கிழமை (மே 4) கத்தரி வெயில் தொடங்குகிறது.

செய்யாறு பகுதியில் சாலையோரங்களில் பனை நுங்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும் பனை நுங்குகளை வியாபாரிகள் விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனா். அதிக குளிா்ச்சியுள்ள பனை நுங்கை சாப்பிடுவதால், உடல் சூடு தணிகிறது. மேலும் அம்மை நோய், குடல் புண், மஞ்சள் காமாலை உள்ளிட்டவற்றுக்கு இயற்கை மருந்தாகவும் கருதப்படுகிறது.

மேலும், பல்வேறு சத்துகள் கொண்ட நுங்குகளை வெட்டி எடுத்தப் பிறகு, அவற்றை தோல் நீக்காமல் சாப்பிட வேண்டும். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட நுங்கை பொதுமக்கள் ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT