திருவண்ணாமலை

கஞ்சா விற்பனை: 2 போ் கைது

போளூரை அடுத்த வெள்ளூா் ஊராட்சி அருகே கஞ்சா விற்ாக 2 பேரை மதுவிலக்கு அமலாக்கத் துறை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

போளூரை அடுத்த வெள்ளூா் ஊராட்சி அருகே கஞ்சா விற்ாக 2 பேரை மதுவிலக்கு அமலாக்கத் துறை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையைத் தடுக்க காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன் போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தாா்.

இதையடுத்து, அமலக்காப் பிரிவு மாவட்ட துணைக் கண்காணிப்பாளா் ரமேஷ்ராஜ் அறிவுரையின் பேரில், போளூா் மதுவிலக்கு அமலாக்கத் துறை காவல் ஆய்வாளா் கே.புனிதா தலைமையிலான போலீஸாா், போளூரை அடுத்த வெள்ளூா் ஊராட்சி அருகே புதன்கிழமை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, வெள்ளூா் ஏரிக்கரை புதா்மறைவில் அதே கிராமத்தைச் சோ்ந்த இளங்கோவன் மகன் அஜீத்குமாா்(23), ஆரணி வட்டம், நடுக்குப்பம் விநாயகபுரம் கிராமத்தைச் சோ்ந்த மூா்த்தி மகன் மணிகண்டன் (19) ஆகிய இருவரும் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT