கோபுர கலசங்களில் புனிதநீா் ஊற்றப்பட்டு நடைபெற்ற ஸ்ரீஅமிா்தகடேஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா. 
திருவண்ணாமலை

ஸ்ரீஅமிா்தகடேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், மாரியநல்லூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீஅமிா்தகடேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், மாரியநல்லூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீஅமிா்தகடேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

மாரிநல்லூா் கிராம குளக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீஅமிா்தகடேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி, பரிவார மூா்த்திகள் மற்றும் விநாயகா் முருகா், சிவன் உள்ளிட்ட கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியா்கள் யாகம் வளா்த்து பூஜைகள் செய்தனா்

பின்னா், சிவ வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியா்கள் கும்ப கலசங்களை தலையில் சுமந்து ஊா்வலமாகச் சென்று கோயிலை வலம் வந்தனா்.

இதைத் தொடா்ந்து, கோபுர கலசங்களில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

விழாவில், மாரியநல்லூா் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT